செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (04:18 IST)

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: புதிய தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவசியம் என கருதப்படும் நிலையில் ஆதார் அட்டையை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு அதை நிறைவேற்றியும்விட்டது. ஆனால் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை மட்டும் இதுவரை மத்திய அரசு இணைக்க கூறவில்லை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுவிட்டால் கள்ள ஓட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் வாக்கு இயந்திரங்களிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. இதனால் அரசியல்வாதிகள் இதற்கு மட்டும் விதிவிலக்கு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது புதிய  தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ்ராவத், செய்தியாளர்களிடம் பேசிய போது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறினார். நாடு முழுவதும் தேர்தல் பணிகள் நியாமானதாகவும், நேர்மையானதாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக தேர்தல் முறைகளில் மாற்றங்களில் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு கண்டிப்பாக ஆதார் எண்னை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டினால் விரைவில் ஆதார்-வாக்காளர் அட்டை இணைக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.