வெறிநாய்கள் கடித்து 8 வயது சிறுவன் பலி

dog
Last Modified வியாழன், 12 ஜூலை 2018 (08:12 IST)
உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்க்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
 
உத்திரபிரதேசத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 13 குழந்தைகள் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்பொழுதும் தொடர்கதையாகி வருகிறது.
 
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நன்தோஷி கிராமத்தை சேர்ந்த 8 வயது கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை கடித்து குதறியது. 
 
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :