அப்பனா டா நீ? பெற்ற குழந்தையை குடிபோதையில் தூக்கி அடித்த தந்தை

son
Last Modified செவ்வாய், 10 ஜூலை 2018 (09:17 IST)
தெலுங்கானாவில் தந்தை ஒருவர் பெற்ற மகனை குடிபோதையில் ஆட்டோவில் தூக்கி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். அந்த நபர் போதைக்கு அடிமையானதோடு தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அந்த நபர், தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே கோபத்தை அந்த பிஞ்சுக் குழந்தையிடம் காட்டியுள்ளான் அந்த கொடூர தந்தை. குழந்தையை வெளியே இழுத்து வந்து அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக தூக்கி அடித்தார். மேலும் தலைகீழாக சிறுவனை பிடித்த நிலையில், தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனை தடுக்க போன அப்பகுதி மக்களையும் மிரட்டியுள்ளார் அந்த நபர்.
 
இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகவே போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த குழந்தையின் தந்தையை தேடி வருகின்றனர். அடிப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது நலமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :