செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (12:29 IST)

151 கொரோனா மாதிரிகளில் 90 டெல்டா பிளஸ்

ஆபத்தானதாக கருதப்படும் டெல்டா பிளஸ் திரிபு வகையை சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்ட 151 கொரோனா மாதிரிகளில் 90 மாதிரிகள் மிக ஆபத்தானதாக கருதப்படும் டெல்டா பிளஸ் திரிபு வகையை சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது கவலைக்குரிய விஷயம் என்று கோவிட் தொடர்பு அலுவலர் தீப் தெப்பர்மா தெரிவித்துள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் எனப்படும் மரபணு வரிசைப் படுத்தலுக்காக இந்த 151 மாதிரிகளும் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டன.