திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (13:29 IST)

குரங்கு குட்டியை கொன்ற நாய்கள் ... பழிக்கு பழியாக 80 நாய்கள் குரங்குகள்...!

மகராஷ்ட்ரா மாநிலத்தில் குரங்குகள் சுமார் 80 நாய்களை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 
மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பீட் என்னும் இடத்தில் குரங்குகள் நாய்களை கடித்து குதறி கொல்வதாகவும் நாய்களை தூக்கிக்கொண்டு உயரமான கூரைகளின் மேல் சென்றி அங்கிருந்து நாய்களை தள்ளி கொல்வதாகவும் அங்கு வசிக்கும் பொது மக்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் குரங்குகளை விரட்டி அடித்தனர். அதோடு வெறித்தனமான இரண்டு குரங்களை அடையாளம் கண்டு அவற்றை சிறைபிடித்தனர். நாய்கள் குரங்கு குட்டி ஒன்றை கொன்றதால் குரங்குகள் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.