காஷ்மீரை பிரிக்க 3 நபர் குழு.. மத்திய அரசு அதிரடி

Arun Prasath| Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (09:07 IST)
காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சட்டப்பிரிவை ரத்து செய்து, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. செல்ஃபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில், 3 நபர் குழுவை, காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் ராணுவ செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அந்த குழுவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த குழு, 2 யூனியன் பிரதேசங்களுக்கான எல்லையை குறித்து ஆய்வு செய்து, உடனடியாக பிரிவினைக்கான பணிகளை தொடங்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :