திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (15:39 IST)

3 சொகுசு கார்கள் - ரூ.3 கோடிக்கு சொத்துக்கள்.! வினேஷ் போகத் சொத்துப்பட்டியல் விவரம்.!!

Vinesh Phogat
ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி உள்ள முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  
 
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அதிக எடை உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதை அடுத்து ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில் தேர்தலை ஒட்டி தாக்கல் செய்த  வேட்புமனுவில் வினேஷின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ.3 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், வால்வோ (Volvo) XC 60 ரக கார், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார், 17 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா இன்னோவா  என மூன்று கார்கள் வைத்துள்ளார்.
 
இதில் இன்னோவா கார் கடனில் ரூ.13.61 லட்சத்தை மாத தவணையாக திருப்பிச் செலுத்தி வருகிறார். அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.1.10 கோடி என்றும், சோனிபட்டில் உள்ள வீடு உட்பட ரூ.1.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை  வைத்துள்ளார். இது தவிர, போகாட் ஆக்சிஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் கணக்கு வைத்துள்ள்ளார்.

அதில் மொத்தமாக சுமார் ரூ.40 லட்சம் இருப்பில் உள்ளது. 1.50 லட்சம் மதிப்பிலான பிரீமியத்துடன் கூடிய இன்சூரன்ஸ் வைத்துள்ளார். தன்னிடம் ரூ.1,95,000 ரொக்கப் பணம் இருப்பதாக வினேஷ் போகத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.