வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:36 IST)

வினேஷ் போகத்தை எதிர்த்து WWE வீராங்கனை.. ஆம் ஆத்மி அதிரடி அறிவிப்பு..!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் வினேஷ் போகத் அரியானா மாநிலத்தில் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து இன்னொரு மல்யுத்த வீராங்கனையை ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகத், ஜுலானா என்ற சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆம் ஆத்மி கட்சி வினேஷ் போகத் போட்டியிடும் ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை கவிதா என்பவரை களம் இறக்கி உள்ளது.

 கடந்த பாராளுமன்ற தேர்தலில் அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் தற்போது தனித்தனியாக போட்டியிடுகின்றன. அதுமட்டுமின்றி அதிரடியாக இரு கட்சிகளும் முக்கிய வேட்பாளர்களை களம் இறக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran