மும்பையில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா
மும்பையில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மும்பை மாநகராட்சி தெரிவித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 20,971 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 874,780 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மும்பையில் இன்று கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மும்பையில் பலி எண்ணிக்கை 16,394 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் மும்பையில் இன்று 8,490 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து மும்பையில் குணமானோர் எண்ணிக்கை 764,053 ஆக உயர்ந்துள்ளது.