ஒரே நாளில் 18 யானைகள் உயிரிழப்பு… விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?
அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 18 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள நாகான் மாவட்டத்திற்கு உட்பட்ட பமுனி என்ற கிராமம் அடர்ந்த வனங்களும், மலைகளும் சுற்றிய கிராமம். இந்நிலையில் அந்த ஊர் பொதுமக்கள் நேற்று மலையடிவாரத்தில் 4 யானைகள் இறந்து கிடந்ததைப் பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்த போது மலையடிவாரத்தில் கிடந்த 4 யானைகள் மட்டுமில்லாமல் மலை உச்சியில் 14 யானைகளும் இறந்து கிடந்துள்ளன. இதையடுத்து யானைகளுக்கு இன்று உடல் கூறாய்வு செய்யப்பட உள்ளது.
யானைகளின் மரணத்துக்குக் காரணம் மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் யானைகள் நல ஆராய்ச்சியாளர் விஜயானந்த சவுத்ரி யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார்.