ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:31 IST)

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நிர்வாணமாக 2 கிலோமீட்டர் நடந்த கொடூரம்

rape
15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் நிர்வாணமாக அவர் இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்த கொடூரம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அனாதையாக விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனை அடுத்து அந்த சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கூறியபோது வீடு திரும்பிய சிறுமி ரத்த காயத்துடன் இருந்தார் என்றும் அதன்பிறகு அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார் என்றும் அதன்பிறகு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமிக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று அவர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்திருப்பதாகவும் மற்ற நான்கு வரை நால்வரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் சிறுமியின் உடைகளையும் பிற பொருட்களையும் எடுத்து விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது