செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (17:27 IST)

கடைசி நிமிடத்தில் தப்பிக்க நினைத்த 3 பேர்: 11 பேர் தற்கொலை விவகாரத்தில் புதிய தகவல்

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1ம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும், முதியவரான நாராயணி தேவி மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.


 
வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரிகளில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், வீட்டிற்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. அந்த அறையில்தான் அவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதாவது, தங்கள் ஆன்மா அந்த குழாய் வழியாகவே வெளியேறும் என அவர்கள் தங்கள் டைரியில் குறிப்பிட்டுள்ளனர்.  

வீட்டின் அருகிலிருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும்படி யாரும் அன்று அவர்களின் வீட்டிற்கு வரவில்லை. மாறாக இரவு 10 மணியளவில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வருவதும், சிறுவர்கள் கயிறுகளை எடுத்து வருவதும் பதிவாகியுள்ளது. எனவே, அவர்கள் சொர்க்கத்தை அடையவேண்டும் என விரும்பியே தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆனாலும் இவர்களது மரண விவகாரத்தில் உறுதியான தகவல் கிடைக்காத நிலையில் தூக்கிட்ட 11 பேரில் 3 பேர் கை கட்டுகள் அவிழ்ந்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அந்த 3 பேரும் தூக்கிலிருந்து தப்பிக்க நினைத்து முயன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.