1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (12:24 IST)

பீகாரில் கடும் மழை: மின்னல் தாக்கி 11 பேர் பலி

பீகாரில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

 
 
பீகாரில் வடகிழக்கு மாவட்டங்களில் நேற்று முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களில் வெள்ளம் அதகளவில் சூழ்ந்துள்ளது. மேலும், மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், சிலர் படுகாயமைடைந்துள்ளனர்.
 
இந்த மழை சேதத்தால் வடகிழக்கு மாவட்டங்களான அரியியா, பூர்ணி, கிஷங்கன்ஜ், கத்திஹா், சப்ளால், காகரியா மற்றும் சஹா்சா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.