1. இதர வாசிப்பு
  2. »
  3. வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008
  4. »
  5. மக‌ளி‌ர் ‌தின‌ம்

கிட்னி மோசடியை வெளிக்கொணர்ந்த காவல் மங்கை!

செல்வி

கிட்னி மோசடியை வெளிக்கொணர்ந்த காவல் மங்கை!
நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பிய கிட்னி மோசடிக் குற்றத்தைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா?

webdunia photoWD
உங்களில் ஒருவர்தான். அவரது பெயர் மஞ்ஜில் சைனி என்ற பெண். அவர் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. மஞ்ஜில் சைனி டெல்லி செயின்ட் ஸ்டீபன்சில் பட்டப்படிப்பு முடித்தவர். பின்னர் டெல்லி ஸ்கூல் ஆ·ப் எகனாமிக்ஸில் பட்ட மேற்படிப்பு முடித்தவர்.

கல்லூரி நாட்களில் எந்த திசையை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்ற எந்த குறிக்கோளும் இல்லாமல் மஞ்ஜிலின் பயணம் தொடர்ந்தது.

இதன் விளைவாகத்தான் பட்ட மேற்படிப்பு முடித்ததும் இவர் ஒரு அலுவலகத்தில் உயர் பொறுப்பில் அமர்ந்தார். இந்த பணியில் சில நாட்கள் மட்டும் இருந்த மஞ்ஜில் ஞானோதயம் பெற்றவராய் தனது பாதையை அறிந்து தனது பயணத்தை முடிவெடுத்தார்.

வித்தியாசமான குறிக்கோள்தான் அது. அதனை தன் உயிர் மூச்சாக நிலைநாட்டி அந்த பெண்மணி சிவில் தேர்வை எழுதினார்.

சிவில் தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவெடுத்திருந்த போதுதான் அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சியான திருமணமும் நடந்துவிட்டது.

குடும்பத்தையும், தனது லட்சியத்தையும் ஒரு சீராக கொண்டிருந்தார் மஞ்ஜில். இரவு பகலாக படித்த மஞ்ஜிலுக்கு அவரது கணவர் வீட்டின் தரப்பில் பலத்த ஆதரவு.

கணவர் மட்டுமல்லாமல் கணவரின் தாயும், தந்தையும் அவரது சிவில் தேர்வு கனவுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து அவரை தேர்வுக்குத் தயார் படுத்தினர்.

மிகுந்த சிரமத்திற்குப் பிறகு முதன் முயற்சியிலேயே இந்திய காவல் பணிக்கு (ஐ.பி.எஸ்.) தேர்ச்சி அடைந்து சில மாதங்கள் பயிற்சி பெற்றார்.


பயிற்சியின்போது அவரது கடின உழைப்பைக் கண்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். மஞ்ஜில் பயிற்சி பெற்ற 8 பேர் கொண்ட குழுவிலேயே முதல் மாணவியே தேர்ச்சி பெற்றார்.

2007 அக்டோபர் மாதம் காவல்துணை கண்காணிப்பாளர் பதவியில் பொறுப்பேற்றார். அந்த பெண்மணியின் துணிச்சலைக் கண்டு அவரை மேலதிகாரிகள் பாராட்டினர்.

அவரது வாழ்க்கைப் பாதையில் ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது.

அன்று... ஜனவரி 22, 2008 மொராபாத் ரயில் நிலையத்தில் 3 பேர் கடும் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மஞ்ஜில் சைனியின் உத்தரவுப்படி அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அதில் ஒருவன்தான் ஜியாசுத்தின் என்பவன். கிட்சி மோசடியில் தரகனாக இவன் இருந்துள்ளான்.

காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது கிட்னி மோசடி குறித்துத்தான் அவர்களுக்கிடையே சண்டையே நடந்து கொண்டிருந்ததாம்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் கிட்னி மோசடி மன்னன் உபேந்திராவின் (பெயர் மாற்றப்பட்டு) பெயர் வெளிவந்தது.

அதன்பிறகு இந்த வழக்கில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தி கிட்னி மோசடி குறித்த அனைத்து விவரங்களையும் வெளிக்கொணர ம‌ஞ்‌ஜி‌ல் சை‌னி தலைமை‌யிலான காவ‌ல்துறை‌க் குழு திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்தினர்.

அதன்படி, கியாசுத்தினை உபேந்திராவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வைத்தனர். உபேந்திராவை மடக்கிப் பிடிக்க குறிப்பிட்ட ஓரிடத்திற்கு அவனை அழைத்தனர். ஆனால் இரண்டு நாள் கடந்தும் உரிய இடத்திற்கு உபேந்திரா வரவில்லை.

பின்னர் ஜனவரி 24ஆம் தேதி இரவு உபேந்திராவே கியாசுத்தினை தொடர்பு கொண்டு குர்காவ்னில் இருக்கும் பாலம் விஹார் என்ற இடத்திற்கு வரச் சொன்னான்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டதை வைத்தே அவனது இருப்பிடத்தை அறிந்து, உபேந்திராவை மடக்கிப் பிடித்தனர் காவல்துறையினர். அவன்தான் தற்போது நாடறிந்த சிட்னி மோசடி மன்னன் அமீத்குமார்.

அதன் பிறகுதான் செய்திகளை தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கே தெரியுமே? தற்போது அமித்குமாரின் நிலைமை என்னவென்று.