புதிய ஓய்வூதியத் திட்டம் மே மாதம் முதல் செயல்படும்!
புதிய ஓய்வூதியத் திட்டம் இவ்வாண்டு மே மாத இறுதிக்குள் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியை மேலாண்மை செய்வதற்காக மூன்று பொறுப்பாளர்களை ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை சட்ட வளர்ச்சி ஆணையக் குழு நியமித்துள்ளது.
இம்மாத துவக்கத்தில் உள்ள நிலைமைப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 2.85 லட்சம் ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். அரசின் பங்கும் வட்டியும் சேர்த்து இதுவரை ஓய்வூதிய கணக்கில் சுமார் ரூ.1,177 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. 19 மாநில அரசுகள் தங்களது புதிய பணியாளர்களுக்காக ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்துள்ளன.
காப்பீட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2000-மாவது ஆண்டில் 6-ஆக மட்டுமே இருந்தது.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் முதல் ஆண்டு பிரிமியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை ரூ.44,696 கோடியாகும். சென்ற ஆண்டு இந்த தொகை ரூ.44,073 கோடியாக இருந்தது. 2000-01-ல் உத்தரவாதம் தரப்பட்ட மொத்த பிரிமியத் தொகை ரூ.34,898 கோடி. இது சென்ற நிதியாண்டில் ரூ.1,56,041 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பாண்டில் ஆயுள் காப்பீடு அல்லாத காப்பீட்டு நிறுவனங்கள் சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாத வரையிலான காலத்தில் ரூ.18,509 கோடிக்கான பிரிமியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இத்தொகை ரூ.16,560 கோடியாக இருந்தது.
வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறு காப்பீட்டுத் திட்டங்களுக்கு கிராமங்களில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் விளம்பர கொடுக்குமாறு மாநில அரசுகளை காப்பீட்டு ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையக் குழு கேட்டுக் கொண்டுள்ளது என்று மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.