ஹோலி சில முக்கிய விதிமுறைகள்
`ரங்கவசி'
பௌர்ணமியன்று தான் ஹோலி கொண்டாடப்படும். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, ரங்கவசி என்ற ஒரு சடங்கு தொடங்கி விடும். இந்தச் சடங்கின் போது குடும்பத்திலுள்ள அனைவரும், வண்ணங்களை சேகரித்து வைக்கின்றனர். குடும்பத்திலேயே முதியவர் ஒருவர்தான் முதலில் பாத்திரத்தில் தனிதனியாக குவிந்து வைத்திருக்கும் வண்ணங்களை தண்ணீருடன் சேர்த்து மற்றவர்களின் மேல் ஊற்றுவார். அதன் பிறகு "இளசு"களுக்கு தான் கொண்டாட்டம். மாலையில் வடக்கே பிரபலமான `குஜ', `பப்பிரி', `காஞ்சிக்கேவட்' போன்ற பலகாரங்களை செய்து சாப்பிடுவார்கள்
புனோ :- ரங்கவசிக்கு அடுத்த நாள் தான் `புனோ'. இன்று தான், ஹோலிக என்ற மரத்தை எரிக்கின்றனர். அந்த நெருப்பை வலம் வந்து ஆடிப் பாடி மகிழ்வார்கள். முள்ளங்கியை தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம். வயது வித்தியாச மின்றி எல்லோரும் பங்கேற்கும் விளையாட்டு இது. ஹோலி என்றாலே விளையாட்டுதான் நினைவுக்கு வரும். வண்ணங்களை மற்றவர்கள் மீது பாய்ச்சி மகிழ்வது. `அமீர்' `குலால்' என்ற பெயருள்ள நிறங்களை `குரு', மற்றும் பெற்றோர்களின் பாதங்களில் பூசி மரியாதை செலுத்துகின்றனர். "வர்ண குளியல்" மனிதர்களுக்கு மட்டுமல்ல, தெய்வத்திற்கும் உண்டு.
ப்யால்
ஹோலியன்று இன்னொரு விசேஷ பழக்கம் `ப்யால்'. திருமணமான மகளையும் மருமகளையும், வீட்டிற்கு விருந்துக்கு அழைப்பார்கள். விருந்துண்டப்பிறகு மருமகனுக்கு, ஒரு டம்ளர் தண்ணீரும் அத்துடன், ஐந்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான ஒற்றை ரூபாய் நோட்டை அன்பளிப்பாக அளிக்கின்றனர். மணமக்களுக்கு, மாமியார், கோதலி என்கிற பரிசை வழங்குவார்.
புது மணமகளுக்கொரு விளையாட்டு
ஹோலி விளையாட்டுகளில் மிகவும் ரசிக்கக்கூடிய விளையாட்டு திருமணமாகி புதிதாக வரும் மணமகளின் மாமனாரையும், மாமியாரையும் வீட்டிலுள்ள குழந்தைகள் ஒரு அறையிலிட்டு பூட்டுகின்றனர். அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியது புது மணப்பெண்ணின் பொறுப்பு. அதற்காக அவர் குழந்தைகளுக்கு, இனிப்பு பண்டங்கள், புது உடைகள் இவைகளை வழங்க வேண்டும்.
ஹோலி உடைகள்
ஹோலிக்கு பாரம்பரிய உடை ஒன்றுண்டு. இந்த உடைக்கு பெயர் `தான்சிய'. இந்த உடையைத்தான் திருமணமான தமது மகள்களுக்கு தாயார் பரிசளிப்பார். `இந்தியன் பிஸ்க்' என்ற மஜந்தா வண்ண பார்டருடனான இந்த புடவை மிகவும் அழகாக இருக்கும். புடவையின் மத்தியில் மஜந்தா நிறத்தில், பல்வேறு வடிவங்களில் தயார் செய்வார்கள். அதற்கு பிறகு `கோட்டா' என்கிற பட்டு ஜரிகை நூலால் புடவையை அழகுப்படுத்தி முந்தாணியின் கீழே, தங்கம் மற்றும் வெள்ளியால் `கிரண்' தைத்து அலங்காரம் செய்கின்றனர்.
| |
|