Romance | Romantic Life | Romance Tips | For Couple | ஊடலுக்குப் பின் கூடல்
webdunia photo
WDஒரு பெரும் சண்டை, சண்டைக்குப் பின் சமாதானம், சமாதானத்திற்குப் பின் தாம்பத்ய உறவு வைப்பது ஒன்றும் முரண்பாடான விஷயமல்ல. காலம்காலமாக வந்து கொண்டிருக்கும் விஷயம்தான். பெரும்பாலான தம்பதியர்கள் அனுபவித்த ஒரு விஷயமாகவும் இது இருக்கும்.
ஏதோ ஒரு கருத்து வேறுபாட்டினால் தம்பதிகளுக்குள் சண்டை வரலாம். ஒருவர் தன் தவறை உணர்ந்து அல்லது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கலாம். அல்லது தவறை இருவரும் மறந்து விடலாம். பிறகு என்ன.. ஒரே கொஞ்சல்தானே..
webdunia photo
WDஒவ்வொரு விஷயத்தையும், அவர்களது இடத்தில் இருந்து பாருங்கள் உங்கள் வாழ்க்கை பலாப் பழத்தின் தோல் போல் அல்லாமல், பலாச் சுளை போல் மாறும்.
