பெண்ணில் இருந்து வேறுபடும் ஆண்
பேராசிரியர் டாக்டர் டி. காமராஜ்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை மட்டுமே உள்ளது. அது என்ன என்று தெரியுமா? அவர்கள் இருவருமே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள்.
இது மட்டுமே அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை.
மற்றபடி உடலில் இருந்து உள்ளம் வரை முழுக்க முழுக்க வேறுபாடுகள்தான் நிரம்பியிருக்கின்றன.
என்ன ஆச்சரியமாக உள்ளதா? இது தெரியாமல் பல காதலர்கள் புலம்புவது உண்டு. என்னுடைய ரசனையும், என் சிந்தனையும் அப்படியே ஒத்துப்போகிறது. அதனால்தான் காதலித்தோம் என்பார்கள். பிறகுதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சிகரமான உண்மையேத் தெரிய வரும். அவர்களுக்குள் ஒற்றுமையை விட வேற்றுமையே அதிகம் என்பது.
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பதுதான் மெய். யாராவது ஒருவர் அவரை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன் என்று சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை.
ஏன் தெரியுமா, யாரையும் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு சூழ்நிலையில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் மற்றவர் எப்படி புரிந்து கொள்ள முடியும்.
அதனால் காதலிக்கும் முன் அவரை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதையெல்லாம் நிறுத்திக் கொண்டு, பெண்களின் இயல்புகள் பற்றி ஆண்களும், ஆண்களின் இயல்பு பற்றி பெண்களும் தெரிந்து கொள்வது சிறிது பயன்தரும்.
பெண்களைப் பற்றி ஆண்களும், ஆண்களைப் பற்றி பெண்களும் நினைப்பது என்ன? அடுத்த இதழில் பார்க்கலாம்.
நன்றி
நூல் : காதலிப்பது எப்படி?
பேராசிரியர் டாக்டர் டி. காமராஜ்
இந்த நூல் கிடைக்கும் இடம்
நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ்
10, ஜவகர்லால் நேரு சாலை,
வடபழனி, சென்னை - 26
தொலைபேசி - 24726666, 24720202

ஆண்கள் |
பெண்கள் | |
ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள். |
பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள். |
ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. | பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அக்கறை காட்டுவார்கள். |
குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்கள் தொல்லை என தப்பிக்கவே நினைப்பார்கள். |
குழந்தைகளை வளர்ப்பதிலும், அன்பு காட்டுவதிலும் அக்கறை செலுத்துவார்கள். |
எவரும் தம்மை பாதுகாப்பதையோ, கண்காணிப்பதையோ விரும்புவதில்லை. |
பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள். |