1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. கவிதைகள்

இன்றைய சமுதாயம்

இன்றைய சமுதாயம்
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.

இன்றைய சமுதாயம்

இன்றைய
இளைய
இதயங்கள்
இதமான வசந்த காலங்களை
காதலிப்பதை விட
இலையுதிர் காலங்களையே
விரும்புகின்றன!

இவர்களின்
விரல்கள் கூட
சோக வீணையே
மீட்டுகின்றன!

இவர்கள்
நினைவுகளில்
இருப்பதைவிடஷ
கனவுகளில்
மிதப்பதே அதிகம்!

இவர்கள்
நிஜங்களை
நேசிப்பதைவிட
நிழல்களையே
அதிகம் நேசிக்கின்றனர்!

இவர்களின்
மணவறைகள்
அலங்கரிக்கப்படுவதை விட
கல்லறையே அதிகம்
அலங்கரிக்கப்படுகிறது!


இவர்கள் வேலை தேடுகின்றபோது,
தேடலே வேலையாகி
விடுகின்றது!!

இளைஞனே
நீ எழுந்து நின்றால்
இமயம் தொடும்
உன் தோள்கள்.
About Writer
Webdunia