முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  பேட்டிகள்
 
நேர்காணல் : எட்வர்ட் சயீத்
ரி.கீ. : ஐரோப்பாவிற்கு இதற்கான தேவை எங்குள்ளது?

எ.ச. : ஐரோப்பாவைப் பொருத்தளவில் அதன் தலைவாசலில் இஸ்லாம் உள்ளது. இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. ஐரோப்பிய வகைப்பட்டதாக இல்லாத கலாச்சாரங்களில் இஸ்லாம் மட்டுமே முற்றாக அழிந்துவிடாமல் இன்றளவும் நீடிக்கிறது. யூத, கிறித்துவ மதங்களுக்கு நெருக்கமாகவும், ஒன்றே கடவுள் என்ற பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் இஸ்லாம் உள்ளது. நீடித்து வரும் உரசல்களுக்கான காரணம் இதுவே. இந்தியாவிலுள்ள ஆங்கிலேயர்களின் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டதைப் போல இங்கு தீர்க்கப்படவில்லை.

இஸ்லாமிய, அராபிய உலகு குறித்த தனது எதிர்நிலைப்பாட்டிலிருந்தே மேற்கத்திய கருத்து உருவாகியுள்ளது என்றே நான் கூறுவேன். இக்கருத்து அநேகமாக இறையியல் விசயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆபிரகாம், மோசஸ், ஏசு போன்றோரில் தொடங்கும் தேவதூதப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தன்னைப் பார்த்து முகமது நபியை யூத, கிறித்துவ மதங்கள் தோன்றிய அதே மண்ணில் மேலெழும்பி வநத, அச்சுறுத்தக்கூடிய வெளிப்பாடாகவே பார்த்தனர். 7,8-ம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சினைகள் இதுவாகவே இருந்தது. இது ஒரு தனி வகைப்பட்ட பிரச்சினை என்றே கருதுகிறேன். இக்கலாச்சாரப் போட்டி மனப்பான்மை ராணுவ நடவடிக்கையால் மேலும் கூர்மைப்படுத்தப்படுகிறது. பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளும் இப்போட்டியை விசிறிவிடுகின்றன. இப்போட்டிகளில் பெருமளவு அறியாமை நிலவுகிறது. முஸ்லீம், ஐரோப்பியர்களுக்கு இடையில் நிலவக்கூடிய பருண்மையான அனுபவங்களை பகுத்துணர்வதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. யதார்த்தத்தில் இந்த அனுபவங்கள் மென்மையான காழ்ப்புணர்வைத் தாண்டி மிகவும் சிக்கலானதாக உள்ளது. கிரேக்க தத்துவம் முஸ்லீம்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு பின்பு அது இங்கிருந்து மேற்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. ஐரோப்பிய வரலாறு இஸ்லாமிய அறிவியலைச் சார்ந்திருப்பது போன்றவற்றிலிருந்து இவர்களுக்கிடையில் உள்ள சார்புத் தன்மையைப் பார்க்க முடியும்.

ரி.கீ. : அவிசன்னா, அவாரோஸ் போன்ற அராபியச் சிந்தனையாளர்கள், CORDOBA SCHOOL, ANDALUSIAN SCHOOL போன்ற அராபிய தத்துவ மையங்கள், இந்த சிந்தனைப் பரிமாற்றத்தில் ஆற்றியுள்ள பெரும்பங்கு தத்துவ வாதியான என்னை மிகவும் பாதிக்கிறது.

எ.ச. : நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. பல்கலைக்கழகம் பற்றிய கருத்து அராபிய உலகில் உருவானதே. The collegium என்றழைக்கப்படும் கல்லூரி பற்றிய கருத்தும் உண்மையில் இஸ்லாமியக் கருத்தே.

ரி.கீ. : ஐரோப்பிய, அராபிய உலகுகளுக்கிடையிலான மோதல்களுக்கு சமீபகாலத்தில் பிரபலமான பல உதாரங்களைக் காட்ட முடியும். வளைகுடாப் போரை மட்டும் இங்கு நான் கூறவில்லை. ஐரோப்பாவிற்குள்ளேயே நிலவக்கூடிய முரண்பாடுகளையும் இங்கு கவனத்தில் கொள்கிறேன். சல்மான் ருஷ்டி பிரச்சினையில் ஒட்டுமொத்த சமூகத்துக்கான உரிமைக்கும் (Universal Rights) வேறுபடுவதற்குமான உரிமைக்கும் இடையில் உள்ள பிரச்சினை மையப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பிரான்சின் மதச்சார்பற்ற பள்ளிகளில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணியும் பிரச்சினையும் இங்கு நான் கவனத்தில் கொள்கிறேன். அரேபியா பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவின் காலனியாக இருந்ததால் ஐரோப்பாவில் குடியேற அராபியர்களுக்கு உரிமை உண்டு. ஐரோப்பாவில் குடியேறும் அராபியர்கள் தங்களின் மத, கலாச்சார வித்தியாசகங்களை கைவிட்டுவிட்டு புதிய ஐரோப்பா எனப்படும் இந்த மதச்சார்பற்ற, அனைவருக்குமான இடத்து நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொதுவான வாதம் முன் வைக்கப்படுகிறதே?

எ.ச. : பேச்சுரிமைக்கான உலகளாவிய கோட்பாட்டிற்கே முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைவரும் நடந்து கொள்ளத்தான் வேண்டும். அராபிய உலகில் "மதரீதியிலானவர்கள்" என்று கருதப்படுபவர்களுக்கும் "மதச்சார்பற்ற" சக்திகளுக்கும் இடையில் உயிர் நாடியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பது முக்கியானது என்கிறேன். மதச்சார்பற்ற சக்திகளுடன் என்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளேன். பாகிஸ்தான், வங்காளம் போன்ற இஸ்லாமிய நாடுகள் அனைத்தைப் பற்றியும் என்னால் பேச முடியாது.

அடிப்படைவாதம் குறித்து தொலைக்காட்சியில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. அராபிய, இஸ்லாம் நாடுகளில் நடைபெறும் எல்லா விசயங்களையும் அடிப்படைவாதத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு என்கிறேன். அராபிய உலகம் பலவாறாக உள்ளது. அங்கு ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு மதரீதியான மாற்றுகள் தோல்வியைக் தழுவும் நிலைமை உருவாகிவருவதாக கருதுகிறேன். முஸ்லீம்கள் என்பதில் பொருள் உள்ளது. ஆனால் முஸ்லீம் பொருளாதாரம், முஸ்லீம் வேதியியல் என்பதில் என்ன பொருள் இருக்கிறது. வேறு வார்த்தையில் கூறினால் நவீன அறிவியல், அரசை நடத்துவதற்கு உலகளாவிய நியதி உள்ளது.

மத அடிப்படையில் இல்லாமல் மேற்கை எதிர்க்கின்ற இஸ்லாமியர்களை எப்படிப் பார்ப்பது என்பதே இப்போதைய கேள்வி. காஸா (GAZA) பகுதியின் மேற்குக்கரையோரம் வாழும் மக்கள் தங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கருதிக் கொள்கின்றனர். ஏனெனில் இஸ்ரேலியர் ஊடுருவ முடியாத கடைசிப் பகுதி அது. இவர்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பிலிருந்த அல்ஜீரிய மக்களைப் போன்றவர்கள்.

ஆக, இஸ்லாமும் மதச்சார்பின்மையும் பலவாறாக உள்ளது. சல்மான் ருஷ்டி பிரச்சினையில் தான் நினைத்ததை எழுதுவதற்கு அவருக்குள்ள உரிமையை நான் உள்ளிட்ட பல அராபிய எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெளிப்படையாகவே ஆதரித்துள்ளோம். இது மிக முக்கியமானது. இங்கு இன்னொன்றையும் வலியுறுத்த விரும்பினோம். அரசியல் ரீதியான நிலை எடுத்தார்கள் என்ற காரணம் காட்டி பத்திரிகையாளர்கள், நாவலாசிரியர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் பலர் முஸ்லீம் எழுத்தாளர்கள். புத்தகங்கள் தடை செய்யப்படும் பிரச்சினைக்கு வருவோம். இஸ்ரேலிய சட்டங்களின் காரணமாக காஸாவின் மேற்குக் கரைப்பகுதியில் பிளாட்டோவின் "குடியரசு" அல்லது சேக்ஸ்பியரின் "ஹாம்லட்" புத்தகங்களை வாங்கவோ படிக்கவோ முடியாது என்பதயும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறோம். என்ன காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன என்று புரிந்து கொள்ள முடியாதபடி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சல்மான் ருஷ்டிக்காகப் பரிந்துபேசும் மேற்கத்திய எழுத்தாளர்கள் - அவர்கள் செயல்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே, நானும்கூட இவர்களோடு சேர்ந்து குரல் கொடுத்தேன் - மேற்குக்கரை, காஸாப் பகுதி பாலஸ்தீன மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என்று வரும்போது எங்கு போய்விடுகறிhர்கள்? பாலஸ்தீனர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே கூட இங்கு தண்டனைக்குரிய குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சொல்லை உச்சரித்தால் ஆறுமாதம் சிறைவாசம். இங்கு அனைத்துப் பிரச்சனைகளிலும் ஒரே விதமான அளவுகோலே கடைப்பிடிப்பதாக ஏன் கபடவேடம் போடவேண்டும்? உங்களோடு நாங்களும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாம் அவைகளக்கு எதிராகவும் போராட வேண்டும். ஆனால் நமது போராட்டம் `எல்லா' முனைகளிலும் இருக்க வேண்டும்.


1| 2| 3
மேலும்
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்
பழைய புத்தகக் காட்சி நூலகம்