முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  பேட்டிகள்
 
நேர்காணல் : எட்வர்ட் சயீத்
ரி.கீ : நம்முடைய மரபுகளைக் கண்டுபிடித்து அல்லது மறு கண்டுபிடிப்புக்கு உட்படுத்தி, மரபுகளில் காணப்படும் புனைவுகளையும் குறியீடுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்துவது என்ற தளத்தில் அறிவு ஜீவிக்கு சமூக, தார்மீகப் பங்குள்ளது என்கிறீர்களா? புதிய ஐரோப்பாவை உருவாக்குவது குறித்து அதிகமாகப் பேசப்படும் இச்சூழலில் புதிய கலாச்சார ஏகாதிபத்தியம் உருவாகிவிடும் அபாயம் உள்ளதா?

எ.ச. : 19-ம் நூற்றாண்டுகளில் நிலவிய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிடக்கூடிய ஏகாதிபத்தியம் உருவாவதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இல்லை. அமெரிக்காவின் மறைமுக அதிகாரம், ஆதிக்கம் இவ்வகை ஏகாதிபத்திய உருவாக்கத்திற்கு தடையாக உள்ளது. அமெரிக்காவிற்கு - ஏதோவொரு வகையில் - எதிரான சக்தியாக ஐரோப்பா பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் அராபியப் பார்வையில் அப்படித்தான் படுகிறது. சில தெற்கு ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையில் மத்திய தரைக்கடல் வழித்தொடர்புகள், ஏகாதிபத்திய வகைப்பட்டதாக இல்லாத கலாச்சாரப் பரிவர்த்தனைகள், முன் எப்போதையும் விட இரு பிராந்தியங்களுக்கு இடையில் கொடுக்கல் - வாங்கல் அதிகரித்துள்ளது போன்ற நிலைமைகள் இக்கருத்துக்கு அடிப்படையாகும்.

ரி.கீ. : மரபு ரீதியான பிறரை, - எடுத்துக்காட்டாக அராபிய அல்லது இஸ்லாமிய உலகை - தன்னுள் ஒருவராக ஏற்றுக் கொள்வதில் ஐரோப்பா வெற்றி கண்டு விட்டது எனக் கருதுகின்றீர்களா?

எ.ச. : நான் அவ்வாறு கருதவில்லை. அதில் பிரச்சனை உள்ளது. இத்தாலியை எடுத்துக் கொள்வோம். தன்நாட்டில் உள்ள 10 லட்சம் முஸ்லீம் மக்களால், தான் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அது கருதுகிறது. இந்த முஸ்லீம்கள் வட ஆப்பிரிக்கா, லிபியா, டூனிஸ், எகிப்து போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள். பிரான்சில் குடியேறியுள்ள 20 அல்லது 30 லட்சம் முஸ்லீம்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாலியிலோ ஏற்றுக் கொள்ளப்படாத நிலை. இது அங்கு அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடல்களோ விவாதங்களோ இத்தாலியில் நடைபெறவில்லை; மவுனமே. மாறாக பிரான்சின் தீவிர வலதுசாரியான லீபென் (LePen) க்கும் அவரது மிகத்தாராளவாத எதிர்ப்பாளர் சிலருக்கும் இடையே நடந்து வரும் மோசமான விவாதங்களைப் போன்ற ஒன்று நடைபெற்றால் கூட வரவேற்கத்தக்கதே. இருப்பினும், முஸ்லீம்களின் இருத்தல் விவாதங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தவே செய்யும். "அராபியர்களுக்கும் மேற்கத்தியர்களக்கும் இடையிலுள்ள" நீண்ட பகையுணர்வை அழிக்கக் கூடிய வகையில் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல், பரிவர்த்தனைகளை தீவிரமாக ஆதரிக்கின்ற பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகளை அராபிய நாடுகளில் தற்போது காணமுடிகிறது. மாறாக, இப்படியான விசயங்கள் அமெரிக்காவில் இல்லை. அராபிய நாடுகளுடன் அல்லது இஸ்லாத்துடன் அல்லது அடிப்படைவாதம் அல்லது இதைப்போன்ற ஒன்றுடன் இன்றளவும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கருதிக் கொள்கிறது. எனவே இங்கு கலாச்சாரப் பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசப்படுவதில்லை.

ரி.கீ : மத்திய தரைக்கடல் பகுதி ஐரோப்பிய நாடுகள், அராபிய நாடுகளுடன் குடியேற்றம், கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் பருண்மையான அரசியல் பிரச்சனைகளில் - குறிப்பாக வளைகுடா யுத்தத்தில் இந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியவில்லையே? - எதையும் சாதித்துவிடவில்லையே?

எ.ச. : அதுமட்டுமா. இங்கிலாந்து பேராசையுடன் (Avidly) வெளிப்படையாகவே போரில் கலந்து கொண்டது. மாறாக, வளைகுடாப்போர் முடிந்தபிறகு, இப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்விற்குப் பதில் அரசியல் ரீதியான தீர்வைக் கொண்டு வரும் முயற்சியில் இத்தாலியும், பிரான்சும் தரகர்களாகச் செயல்பட முற்பட்டன. வளைகுடாப் பகுதியில் நிலவிவரும் ஒட்டுமொத்த சூழலுக்காக இல்லாமல் மையப் பிரச்சினையான பாலஸ்தீனப் பிரச்சினையில் சமரசமானதொரு அரசியல் ரீதியான தீர்வை ஏற்படுத்துவதில் இத்தாலியர்கள் ஆரம்பம் முதலாக முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் அவர்களால் அமெரிக்காவை எதிர் கொள்ள முடியவில்லை. இம்முயற்சிகள் ஐரோப்பாவின் முயற்சிகள் என்றில்லாமல் தனிப்பட்ட முயற்சிகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன. நான் கூற வருவது என்னவெனில் ஐரோப்பிய ஆலோசனை சபை மிக நல்ல நிலைப்பாடுகளை எடுத்துள்ளது.

தனித்தனியாகக் கட்டுண்டுள்ள இவர்கள் ஒன்றுபட்ட சமூகமாக செயல்படுவதில்லை. ஒருபுறம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம்; மறுபுறம் இப்போதுள்ள நிலைமையில் எவ்விதமான மாற்றத்தையும் எதிர்க்கின்ற பழமைவாத, பிற்போக்கு அராபிய அரசுகளிடம் எண்ணெய் பெறவேண்டிய நிலை. இதனால் ஐரோப்பியர்களின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதில்லை. ஆனாலும் கலாச்சாரத் தளத்தில் இந்நாடுகளுக்கு இடையில் முற்போக்கான பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான இயக்கங்கள் பெருமளவில் காணமுடிகிறது.

ரி.கீ. : "கிழக்கு பற்றிய" ஒரு பார்வை குறித்து நிறைய பேசியுள்ளீர்கள். இது அடிப்படையில், அரேபிய உலகைப் பற்றி ஐரோப்பா, மேற்கு நாடுகள் அச்சுப்பதித்தது போன்றதொரு மனப்பான்மை கொண்டுள்ள கலாச்சாரப் போக்கை குறிப்பது, இது பற்றிக் கூறுங்களேன்.

எ.ச. : இது மிகத் தீவிரமாக உள்ளது. இதைப் புரிந்து கொள்வதற்கு ஆதிக்க மனப்பான்மை கொண்ட பத்திரிக்கைகளைப் பார்க்க வேண்டியதில்லை. தி டைம்ஸ் பத்திரிக்கையில் ஊடீசூடீசு ஊசுருஐளுநு, டீ'க்ஷசுஐநுசூ போன்றோரின் எழுத்துக்களைப் பார்த்தாலே போதுமானது. இவர்கள் முஸ்லீம்கள் பற்றி எழுதும்போது ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் திருமண உறவுகள் செய்து கொள்ளும் கேவலமானவர்கள் என்று எழுதுகின்றனர். அராபியர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கின்றனர். னுயஎனை ஞசலஉந துடிநேள என்பவர் கூhந ஊடடிளநன ஊசைஉடந என்ற புத்தகத்தில் அராபிய இனத்தைச் சித்தரித்துள்ளதைப் போல வேறு எந்த கலாச்சாரக் குழுவையும் எழுத முடியுமா என்று எனக்குத் தோன்றவில்லை.

ரி.கீ. : இதுவும் ஒருவகை இனவாதம்தானே?

எ.ச. : ஆம். இது சுத்தமான இனவாதமாகும். இது பிறர்குறித்த எவ்வித காரணமுமற்ற அச்சத்தின் விளைவான நோய் (ஓநnடியீhடிbயை), பிறர் தங்களைத் திட்டமிட்டு தவறாக நடத்துகின்றனர் என்ற மனப்பிரமை (ஞயசயnடினை), மனப்பிறழ்வின் அதீதம் (னுநடரளiடியேட குயவேயளல).

1| 2| 3
மேலும்
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்
பழைய புத்தகக் காட்சி நூலகம்