"நமக்கு இதுபற்றி எல்லாம் எவ்வளவு தெரியும்?" நாம் இது பற்றி எவ்வளவு பேசுகிறோம்? நாம் இதுபற்றி பாடசாலைகளில் எவ்வளவு படிக்கிறோம்? (பத்திரிகைகளின்) முதல் பக்கங்களில் இதுபற்றி எவ்வளவு வெளியாகி உள்ளன" என்று கேட்பதன் மூலம் நாம் நம்முடைய கலாச்சாரத்தினுள்ளும், சமூகத்தினுள்ளும் புத்தொளி பாய்ச்ச முடியும்.
பயங்கரவாதப் படையிடம், நிராகுவாவின் தேசிய இராணுவத்தை எதிர்க்காமல், "மென்மையான இலகுவான" நிராயுதபாணி மக்களை குறிவைத்து தாக்கச் சொல்லி முதன்முறையாக, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. நிகராகுவாவின் வான்வெளி முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததால் நிகராகுவாவின் தேசிய இராணுவத்தின் போக்கை குறிப்பெடுக்க முடிந்தது; எனவே கூலிக் கொலைப்படைக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கி நிகராகுவாவின் பாதுகாப்பு இல்லாத விவசாயக் கூட்டுப் பண்ணைகள் மீதும், சுகாதார நிலையங்கள் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த அமெரிக்கா துணை நின்றது.
அதற்கான எதிர்வினை என்னவாக இருந்தது? கடைசியில் நிகராகுவா வல்லரசின் வன்கொடுமைக்கு தலைகுனிய நேரிட்டது. உடனே வெளிப்படையாகவும் பூரிப்போடும் பயன்படுத்தப்பட்ட "முறைகளை"ப் போற்றிப் புகழ்ந்து வெற்றியைக் கொண்டாடினார்கள்.
நாம் இப்படிப்பட்ட கலாச்சாரத்தினுள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஓர் உண்மை என்னவென்றால் பயங்கரவாதம் மட்டுமே செல்லுபடியாகிறது. அது தோற்பது இல்லை. வன்முறை பொதுவாகவே செயலாற்றுகிறது. அதுதான் உலக வரலாறு. இரண்டாவதாக ஒரு பொதுவான மையமான தவறு என்னவென்றால், பலவீனமானவர்களின் ஆயுதம் பயங்கரவாதம் என்று கருதுவது மற்ற வன்முறை வழிகளைப் போலவே பயங்கரவாதமும் பலம் வாய்ந்தவர்களின் ஆயுதம் என்பதுதான் உண்மை.
பயங்கரவாதம் பலவீனமானவர்களின் ஆயுதம் எனக் கருதப்படக் காரணம் பலம் வாய்ந்தவர்கள் கொள்கை பரப்புச் சாதனங்கள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களது பயங்கரம், பயங்கரம் என எண்ணப்படுவதுமில்லை. இப்போது அது உலக பொதுவழக்காகி விட்டது. பயங்கரவாதம் என்பது பலவீனமானவர்களின் ஆயுதம் அல்ல. அது "நாம்" யாராக இருந்தாலும் "நமக்கு" எதிராகப் பயன்படுத்தப்படுகிற ஆயுதம். நீங்கள் யாராவது இதற்கு ஒரு வரலாற்று விதிவிலக்கு கண்டுபிடிக்க முடியுமென்றால், நான் அதை அறிய ஆவலாக உள்ளேன். இது உலகத்தின் வேறு பகுதிகளிலும நடக்கிறது. உதாரணத்துக்கு ஆப்பிரிக்கா ரேகன் காலத்தில் மட்டும், அமெரிக்கா / இங்கிலாந்து நாடுகளின் மறைமுக உதவியுடன் தென் ஆப்பிரிக்கா பக்கத்து நாடுகளின் மேல் நடத்திய தாக்குதல்களில் பதினைந்து லட்சம் மக்களுக்கு மேல் பலியாகி இருக்கிறார்கள். 60 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்பு நாசமாகி இருக்கிறது. நாம் உலகைச் சுற்றி வலம்வந்தால் இன்னும் பல உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்.
பயங்கரவாதம் என்றால் என்ன?
அதற்கு அதிகாரபீடத்தின் சொற்பொருள் விளக்கம் உண்டு. "அலுவலக வரையறை வன்முறையைத் தருணம் பார்த்து பயன்படுத்துவதால் உருவாக்கப்படும் பீதி; அல்லது வன்முறையை ஏவுவதாய் பயமூட்டியும் பலவந்தமாய் கீழ்ப்படியச் செய்தும் அரசியல் அல்லது சமயம் சார்ந்த குறிக்கோள்களை வெற்றியடையச் செய்தல்" என்று அமெரிக்க ராணுவக் கையேடு வரையறுக்கிறது. அதுதான் பயங்கரவாதம். அது ஒரு சரியான வரையறைகூட, பிரச்சினை என்னவென்றால் அதை ஒப்புக் கொள்ளமுடியாது. அதை நீங்கள் ஒப்புக் கொண்டால் தவறான பின்விளைவுகளுக்கு காரணமாகிவிடும்.
நீங்கள் "தீவிரம் குன்றிய போர்தொடுப்பு" (டுடிற iவேநசளவைல றயசகயசந) என்ற அமெரிக்காவின் அதிகாரபூர்வ திட்டத்தின் வரையறையைப் பார்ப்பீர்களானால், நான் மேலே சொன்ன வரையறையோடு அது ஒத்துப் போவதைக் காணலாம். உண்மையில் "தீவிரம் குன்றிய போர்தொடுப்பு" என்பதே பயங்கரவாதத்தின் மறுபெயர்தான். அதனால்தான் எனக்குத் தெரிந்தவரை எல்லா நாடுகளும், தாம் மேற்கொள்பவை எவ்வளவு கொடூரமான நடவடிக்கையாக இருந்தாலும் அவற்றை பயங்கரவாத எதிர் நடவடிக்கை என்றே சொல்லிக் கொள்கின்றன. (ஊடிரவேநச வநசசடிசளைஅ ) நாம் தீவிரம் குன்றிய போர் தொடுத்தல் அல்லது எதிரிடை கிளர்ச்சி (ஊடிரவேநச ஐn ளுரசபநசல) என்கிறோம்.
வேறுசில பிரச்சனைகளும் உள்ளன. இவற்றில் சில 1987 டிசம்பரில் பயங்கரவாதத்துக்கு எதிரான முதல் போர் உச்சத்தில் இருந்தபோது மேலெழுந்தன. பன்னாட்டு அவையின் பொதுக்குழு பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் முடிகின்ற அனைத்து வழிகளிலும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்து உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒரேஒரு நாடு ஹேராண்டுராஸ் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. வழக்கம் போல் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த இரண்டே நாடுகள் - அமெரிக்காவும் இஸ்ரேலும்.
கடந்த 35 வருடங்களாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை சற்றே நினைவு கூறுங்கள். 30 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவின் தயவோடு எல்லா சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் முட்டுக்கட்டை போடப்படுகிறது. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை ஆதரிப்போமானால் ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட யாரையும் நாம் அனுமதிக்க முடியாதுதான்.
இதுபற்றி எந்த பத்திரிகைச் செய்தியும் வெளியிடப்படவில்லை. பயங்கரவாதம் பற்றிய வரலாற்றுக் குறிப்பிலும் இது குறிப்பிடப்படவில்லை. வரையறைகளையும், அறிவுத்திறனையும் கவனத்துடன் அணுகினால்தான் நீங்கள் சரியான முடிவுகளுக்கு வர இயலும் இல்லையென்றால், உங்களுடைய அறிவுத்திறனோ, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் தொழிலோ இழிவுக்குள்ளாகிவிடும்.
இவை எல்லாம் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட ஒப்பந்தம் ஏற்படத் தடைகளாக உள்ளன. நாம் ஒருவேளை கருத்தரங்குகள் அல்லது வேறு ஏதாவது நடத்தி தவறாக அல்ல, சரியான விடைகளைக் கண்டடைகிற வகையில் பயங்கரவாதத்தை வரையறை செய்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். அது அவ்வளவு எளிது அல்ல.
|