என் காதலி என்னைவிட 3 வருடங்கள் பெரியவள். இவளை திருமணம் செய்து கொள்ளலாமா? என்னால் அவளை மறக்க முடியவில்லை. தயவு செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.
வயதில் அதிகமான பெண்ணை மணப்பதில் தவறு இல்லை. பொதுவாகப் பெண்கள் மனதளவிலும், உடலிலும் ஆண்களைவிட சீக்கிரமாக பருவமடைந்து பக்குவமும் முதிர்வும் பெருகிறார்கள். எனவே வயதில் 2-3 வருடங்கள் குறைந்த பெண்களை மணக்கும்போது இருவரது மனநிலையும், மனப்பக்குவதும் ஒரு சேர அமைந்து தாம்பத்தியம் நன்றாக அமைய ஏதுவாகிறது.
|