1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. மற்றவை

ஓவர்டோசும் நோய்களும்

ஓவர்டோசும் நோய்களும்
நாம் நோயிலிருந்து விடுபட அதிக செலவுகள் செய்து, மருத்துவரிடம் காத்திருந்து மருந்துகள் வாங்குகிறோம், ஆனால் மருந்துகளை எந்த அளவுக்கு உட்கொள்ளலாம் என்று தெரியாமலேயே நாமே சில மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஓவர்டோஸஎன்ற பிரச்சனை ஏற்படுகிறது. சில வகை மருந்துகள், சத்துகள் அதிகமானால் அதனாலும் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. அவ்வாறான மருந்துகளின் உண்மையான செயல் பாடுகளையும், டோஸஅதிகமானல் ஏற்படும் சிக்கல்களையும் பார்ப்போம்:

இரும்பு - நுரையீரலிலிருந்து உயிரணுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல சிவப்பணுக்களுக்கு இரும்புச் சத்து உதவுகிறது, ஆனால் இது அதிகப்படியானால் குமட்டல், அடி வயிற்று வலி, மலச்சிக்கல், ஈரல், மற்றும் இதயத்தில் பழுது எற்படுத்தக் கூடும்.

வைட்டமின் ஏ - கண்பார்வை மற்றும் ஆரோக்கியம், சருமங்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி, கருவுருதல் ஆகியவற்றிற்கு உதவும் வைட்டமின் ஏ சத்து அளவுக்கதிகமானால் குறிப்பாக கர்ப்பிணிகள் இதை அதிகம் உட்கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படலாம், இது மட்டுமல்லாமல் தலை வலி, தோல் உரிதல், முடி உதிர்தல், உதடு வெடிப்பு, கண்பார்வை மங்கல், பசியின்மை, வாந்தி போன்றவைகள் ஏற்படலாம்.

துத்தனாகம்- வளர்ச்சிக்கு உதவியாயிருத்தல், பால் நிலை வளர்ச்சி, காயங்களை விரைவில் குணமாக்குதல் மற்றும் புரதச் சத்தை செரிமானம் செய்தலுக்கு உதவுதல் என்று நமக்கு தேவையான துத்தனாகம் பலனளிக்கிறது, இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வாந்தி, பேதி, சிறு நீரக பழுது ஆகியவை எற்படலாம்.

வைட்டமின் சி - எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சி, உடற் தசைகள் வடிவமைய இது பெரிதும் பயன்படுகிறது, மேலும் ரத்தச் சுவர்களை வலுப்படுத்தவும், காயங்களை விரைவில் குணமாக்கவும் இது உதவும், இதனை அதிகம் உட்கொண்டால் குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது வைட்டமின் சி இடையூறு செய்யலாம், உடனடியாக நிறுத்திஅனால் வயிற்றுப் போக்கு எற்படலாம்.

ஆஸ்பிரின்- இன்று இதய நோய் உள்ளவர்களுக்கு ஆபத் பாந்தவனாய் இருப்பது ஆஸ்ப்பிரினே, மேலும், தலைவலி, காய்ச்சல் மற்றும் எரிச்சல் ஆகியவற்றிற்கும் பயனளிக்கிறது, குழந்தைகளுக்கு இது ஆபத்தை விளைவிக்கலாம் காது இரைச்சல் காய்ச்சல் தலைவலி மற்றும் உடற்சொர்வு எற்படலாம்.

கால்சியம்- பற்கள் எலும்புகள் உறுதி பட, ரத்தம் உறைய, நரம்புச் செயல் பாடுகளை கட்டுப் படுத்த இது உதவுகிறது, இதன் சத்து அதிகமானால் சிறு நீரகப் பழுது, மலச்சிக்கல், குமட்டல், அதிகப்படியான தாகம், அடி வயிற்றில் வலி ஆகியவை ஏற்படலாம்.

ஆகவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நாமாகவே இத்தகைய மருந்துகளை அதன் அளவு தெரியாமல் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
About Writer
Webdunia