மைக்ரைன் ஏற்படும் காரணங்கள்
மைக்ரைன் என்ற நோயையும் தலைவலியையும் நாம் ஒன்றாகக்குழப்பிக் கொள்வோம். ஆனால் இரண்டிற்கும் இடையே சிறிய கோடு ஒன்று உள்ளது. இதற்கான விளகத்தைக் காண்போம்.
மைக்ரைன் என்பது என்ன?
மைக்ரைன் என்பது ஒரு வகை ஒற்றை தலைவலி. மூளையின் ஒரு பகுதுயில் உள்ள ரத்தக் குழாய்கள் குறுக்கமடைவதால் ஏற்படுகிறது. இதனால் தலைவலி 2 நாட்கள் வரையிலும் நீடிக்கலாம்.
மைக்ரைனில் இரண்டு வகைகள் உண்டு:
தலைவலி மெதுவாக ஆரம்பித்து பிறகு உக்கிரமடையும், இது 2 நாட்களுக்கு நீடிக்கும், சிறிய சப்தம் கூட தலைவலியை அதிகரிக்கும், வாந்தி, குமட்டலும் ஏற்படும். இது பொது வகை மைக்ரைன்.
மரபான மைக்ரைன் முதலில் பார்வையில் ஏற்படும் கோளாறுகளால் தலைவலி வடிவத்தில் ஏற்படும்.
1. தற்காலிக பார்வை இழப்பு.
2.பேச்சுப் பிரச்சனைகள்.
3.எப்போதாவது பலவீனம், உடல் உறுப்புகள் அல்லது கைகால்கள் பாரிச வாயு.
4 குமட்டல் மற்றும் வாந்தி
5.வெளிச்சத்தில் கண் கூசுதல்.
இப்போது நாம் தலை வலி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்:
தலைவலி என்பது மிகவும் சகஜமாக ஏற்படுவது, தலை கழுத்து அல்லது தோள் பகுதியின் தசைகள் இறுக்க மடைவதாலும், மூளைக்கும் தசைப்பகுதிகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்கள் மித மிஞ்சிய ரத்தத்தால் நெருக்கமடையும்போதும் தலைவலி தோன்றுகிறது.
நாம் வாழும் இந்த போட்டி நிறைந்த உலகில் டென்ஷனாலும் அதிகம் பேருக்கு தலைவலி உண்டாகிறது. உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களாலும் தலைவலி ஏற்படும்.
உணவுப்பழக்க வழங்கள் ஏற்படுத்தும் தலைவலி காரணிகள் மைக்ரைன் ஊக்கிகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
மைக்ரைன் உருவாக காரணமாகும் ரசயானங்கள்:
உணவுப்பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட மைக்ரைன் தலைவலி உள்ளவர்கள் டைரமைன் ரசாயனம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. மூளை நரம்புகளை டைரமைன் விரிவடையச் செய்வதால் ரத்தம் அங்கு வேகமாக பாய்கிறது இதனால் மைக்ரைன் தலைவலி உருவாகிறது.
பாலாடை உள்ளிட்ட சீஸ்கள், பீர், வைன், கடல் மீன் ஊறுகாய், கோழி லிவர், யீஸ்ட், காபி, நார்த்தங்காய், அடைக்கப்பட்ட அத்தி, வாழைப்பழங்கள், முட்டைகள், ஆரஞ்சுகள், பசலை மற்றும் தக்களிகள் ஆகியவற்றில் டைரமைன் உள்ளது. ஆகவே இவற்றை அதிகமாக உட்கோள்வதை தவிர்க்கவும்.
அதேபோல் சாக்லேட்டுகளில் காணப்படும் ஃபினைலெதிலமைன் அத்திப்பழங்களில் காணப்படும் ஆக்டொபமைன், ரெட் வைன் மற்றும் பீர்களில் காணப்படும் ஹிஸ்டமைன் ஆகியவை மைக்ரைன் தலைவலியை தோற்றுவிக்கலாம்.
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை காஃபைன் சுருக்குகிறது, இதனால் காஃபைன் நிறுத்தப் படும்போது அவைகள் விரிவடைந்து ரத்த வரத்து அதிகரிக்கிறது இதனால் தலை வலி ஏற்படுகிறது.
ஆல்கஹால் தன்னிலே மைக்ரைன் தலைவலியை தூண்டுவது அல்ல, மாறாக ரெட் வைன் மற்றும் பீர் வகை மது பானங்களில் காணப்படும் டைரமைன் மற்றும் ஹிஸ்டமைன் மைக்ரைன் தலைவலியை ஏற்படுத்துகிறது.
மைக்ரைன் உள்ளவர்கள் உண்ணா விரதம் மேற்கொண்டால் குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் நோன்பு மேற்கொண்டால் தலைவலியில் போய் முடியும், மேலும் மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அவைகள் இன்சுலின் சுரப்பை வேகமாக அதிகரிக்கும் இதனால் சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைந்து மைக்ரைன் தலைவலி தோன்றலாம்.
இது ஒன்றும் அவ்வளவு ஆபத்தான நோய் இல்லாவிட்டாலும் தொல்லை பிடித்த நோயாகும். இதற்கெல்லாம் தற்போது மருந்துகள் வந்து விட்டன ஆகவே உங்கள் மருத்துவரை ஆலோசித்து விரைவில் சிகிசை பெற்று இதை அடக்கலாம்.