முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > வியாதிகள்
 
காதுகேளாமை குறைபாடு - சிகிச்சை முறைகள்!
செவிடு ஏற்படுவதற்கான காரணங்கள்

பரம்பரை குறைபாடு :

சில வகை செவிடுக்கு அவர்களின் பரம்பரை ஒரு காரணமாக அமையலாம். அவர்களின் பெற்றோர் தங்கள் சொத்துக்களைப் போல காது கேளாமையையும் குழந்தைகளுக்கு அளித்து விடக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. பரம்பரையாக செவிடு வரும் நிலையில் குழந்தை கருவில் உருவாகும் போது உட்புறக் காது சரியான வகையில் வளர்ச்சி அடையாமல் போவதே பெரும்பாலும் நிகழும் குறைபாடாக இருக்கிறது. ஆனால் அதற்காக பெற்றோருக்கு காது கேட்காமல் இருந்தாலும், கண்டிப்பாக குழந்தைகளுக்கும் காதுகேட்காமல் போகும் என்பது அர்த்தமல்ல.

மரபுவழி பாதிப்பு

தந்தையின் விந்தணு தாயின் கரு முட்டையுடன் சேரும் போது, ஏற்படும் சில பாதிப்புகள் காரணமாகவும் செவிடு ஏற்படுவதற்கு வழிவகை உள்ளது.

காது கேளாமை குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சில வகை நோய்களான ருபெல்லா, இன்புளூயன்சா போன்றவை தாக்கும்போது அது பிறவிக் குறைபாடாக அமைந்து விடுகிறது. மேலும் மெத்தில் ஆல்கஹால், குனைன் போன்ற மாத்திரைகள் குழந்தைகளுக்கு அளிக்கப்படும்போது கூட காதுகேளாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதிக சத்தம்

துப்பாக்கி குண்டு சத்தம், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிக அளவு சத்தம், பாறைகளைப் பிளப்பதற்காக வைக்கப்படும் வெடிகுண்டு சத்தம் போன்றவற்றாலும் காது கேளாமை ஏற்படலாம். சத்தமாகப் பேசக்கூடிய ஒருவருக்கு பின்னால் நீங்கள் நின்று கொண்டிருந்தாலோ, அவரது சத்தத்தால் பாதிக்கப்பட்டோ கூட உங்கள் காதுகள் பாதிப்படைய நேரிடலாம்.

விபத்து

விபத்துகளினால் செவிப்பறையோ அல்லது உட்புறக் காதுகளின் பாகங்களோ சேதமடைய நேரிடும் போது காது கேளாமை ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. மண்டை ஓடு பாதிப்பு அல்லது தலைக்காயம் ஏற்படும் போது, காற்று அழுத்த மாற்றம் காரணமாகவும் காதுகேளாமை ஏற்படக்கூடும்.

நோய்கள்

சில வகை நோய்களால் செவிடு ஏற்படலாம். மெனிங்டிடிஸ், சைட்டோமெகலோ வைரஸ் மற்றும் சிற்றம்மை நோய் போன்றவை இந்நோய்களில் அடங்கும். கடுமையான மஞ்சள் காமாலை நோய் கூட சில நேரங்களில் காதுகேளாமையை ஏற்படுத்தும். தவிர சில வகை கெமிக்கல்ஸை உபயோகிப்பதால் கூட செவிடு ஏற்படும்.

வயோதிகத்தால் ஏற்படும் குறைபாடு

வயது அதிகமாகும் போது காது கேளாமை ஏற்படுவது இயற்கையாகிறது. இது சாதாரணமான ஒன்றுதான். இதனால் முழு அளவில் காது கேளாமை ஏற்படாது. பொதுவாக அதிக அளவிலான சத்தத்தில் இருந்து இவை தொடங்கும். வயோதிகர்களால் கேட்க முடியும். ஆனால் சில வகை ஒலிகளை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.

காதுகேளாமையை போக்க...

முதலில் உங்களின் குடும்ப டாக்டரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவரது அறிவுரைப்படி சரியான காது,மூக்கு,தொண்டை நிபுணரின் தொடர் அறிவுரையைப் பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கு உள்ள குறைபாடு எந்த வகையைச் சேர்ந்தது, குணப்படுத்தக் கூடியதா? அல்லது சில வகை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா? என்பதை டாக்டரின் யோசனைப்படி மேற்கொள்ளுங்கள்.

காதுகேளாமையின் விகிதத்தைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். எப்படி இருப்பினும் இந்த பூவுலகில் பிறந்த மானிடப் பிறப்பு என்பதே பெருமை. அதிலும் கூன், குருடு, ஊமை, செவிடு இன்றிப் பிறப்பது அதனினும் சிறப்பு என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அதே நேரத்தில் உரிய சிகிச்சையின் அடிப்படையில் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கைதான் மானிடப் பிறப்பிலேயே மிகப்பெரிய சொத்து எனலாம். எனவே நம்பிக்கை வையுங்கள். நலமுடன் வாழுங்கள்.

1| 2
மேலும்
தோள்பட்டை வலிகளுக்கு ஒரு எளிய தீர்வு!
மார்பக புற்றுநோய்
மூட்டு வலிக்கு முடிவு
வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சிகிச்சை!
ஆஸ்துமா - உணவு முறையே சிகிச்சையாக
மாதவிடாய் சுழற்சி