1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. கட்டுரைகள்

முதுகெலும்பு பாதிப்பிற்கு தோல் செல் சிகிச்சை

முதுகெலும்பு பாதிப்பு தோல் செல் சிகிச்சை ஸ்டெம் செல் புதிய தொழில்நுட்பம்
தோலின் செல்களில் இருந்து நரம்பு செல்களை உருவாக்கும் சிகிச்சை முறையை லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தோலில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை விஸ்கான்சின்-மடிஸன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சிக் குழுவினர் தோலில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கிக் காண்பித்தனர்.

இதன்மூலம் முதுகுத் தண்டுவட பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.

முதுகுத் தண்டுவட பாதிப்பிற்கும் குணமே இல்லை என்ற நிலையில், தண்டுவடப் பகுதியில் உள்ள நரம்புகளை அது பாதித்து விடும் என்பதால், மூளையில் இருந்து முதுகுத்தண்டுவட தசைப் பகுதிக்கு தொடர்பற்ற நிலை ஏற்படும்.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறுவனில் தோலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை ஸ்டெம் செல்களாக உருவாக்கினர். இந்த ஸ்டெம் செல்கள் எந்தவகை திசுக்களாகவும் வளரக்கூடியவை. அந்த வகையில் நரம்பு செல்களாகவும் உருமாற்றிக் கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டால், அதற்குத் தீர்வே இல்லை என்ற நிலை மாறி, தற்போது அதற்கும் தீர்வு கிடைத்திருப்பது மருத்துவ உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Webdunia