முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கோடைக்கேற்ற பழக்க வழக்கம்
நிறுத்துவதால்தான் வேர்க்குருக்கள் தோலில் தோன்றுகின்றன.

லேசான பருத்தி ஆடைகள்

உடலை இறுக்கும் ஆடைகளை தவிர்த்துவிட்டு மிக லேசான, தளர்வான ஆடைகளைப் பயன்படுத்துங்கள். பருத்தி ஆடைகள் கோடைக்கு மிகவும் ஏற்றது.

black
webdunia photoWD
வெயிலை கிரகித்துக் கொள்ளும் கருப்பு போன்ற நிறங்களினால் ஆன ஆடைகளையும் கோடை வரை தவிர்க்கவும்.

குடையைப் பிடியுங்கள்

காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை எங்கு சென்று வருவதாக இருந்தாலும் கையில் குடையை கொண்டு செல்லுங்கள். நேரடியாக சூரிய ஒளி படும் படி வெகு நேரம் எங்கும் இருக்காதீர்கள்.

வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள், சைக்கிளில் சென்றாலும் தொப்பியாவது அணிந்து செல்லுங்கள்.

அ‌திக நேர‌ம் வெ‌யி‌லி‌ல் இரு‌ந்தா‌ல் நமது உட‌‌ல் த‌ண்‌ணீ‌ர் த‌ன்மையை இழ‌க்‌கிறது. இதனா‌ல் மய‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் உணவில் காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்களை விட புதிய பழங்கள் உண்பது கோடைக்கு நல்லது.

கோக், மிரண்டா போன்று குளிர் பானங்களைத் தவிர்த்து பழச்சாறு அருந்துங்கள்.

தினமும் வீட்டிலேயே எலுமிச்சை சாறு செய்து அருந்துவது கோடையை சமா‌ளி‌ப்பத‌ற்கான சக்தியை உடலுக்குத் தரும்.

தவிர்க்க வேண்டியவை

சூடான, மிகுந்த குளிர்ச்சியான, காரம் நிறைந்த, வறுத்த, பொறித்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. இவை அனைத்துமே வெயிலால் உடலில் ஏற்படும் தீங்கினை இரண்டு மடங்காக்கிவிடும்.

அதிக நேரம் வெயிலில் அலைவரை தவிர்க்கவும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும்.

அதாவது பூண்டு, அண்ணாசிபழம், பப்பாளி, பீட்ரூட், மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளவும். மாம்பழமும் உஷ்ணத்தைக் கொடுக்கும். ஆனா‌ல் இதுதா‌ன் மா‌ம்பழ‌க் கால‌ம். இ‌ப்போது சா‌ப்‌பிட‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் ‌பி‌ன் எ‌ப்போது சா‌ப்‌பிடுவது. எனவே ஒரு நாள் இரவு முழுவதும் மா‌ம்பழ‌த்தை தண்ணீரில் முக்கி வைத்திருந்து மறுநாள் எடுத்து சாப்பிட்டால் உஷ்ணம் கட்டுப்படும்.

தண்ணீருடன் செல்லுங்கள்

எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டீலை உடன் வைத்திருங்கள். கோடையில் தண்ணீர் தாகத்திற்கு பஞ்சமே இருக்காது. கண்ட கண்ட இடங்களிலும் கடை‌யிலும் இருக்கும் நீரை வாங்கிப் பருகி அதனால் பல்வேறு நோய்த் தாக்குதல்களை ஏன் பெற வேண்டும். சுத்தமான குடிநீரை உங்களுடன் வைத்திருந்து தேவைப்படும் போதெல்லாம் குடித்துக் கொள்வது நலம்தானே.
<< 1 | 2 
மேலும்
ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
உடல் உறுப்புகளின் நேரப்பட்டியல்!
கண்களை கண்காணியுங்கள்!
மன அழு‌‌த்த‌‌ம் அ‌திக‌ரி‌க்க குடு‌ம்ப‌ச்சூழ‌ல் தா‌ன் காரண‌‌ம்: ஆ‌ய்வு!
இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!
‌நீ‌ண்டகாலமாக தொடரு‌ம் வ‌லி‌க்கு காரண‌ம் சிவப்பணுச் ‌சிதைவே!