விட்டமின் டி குறையை நிவர்த்தி செய்தால் மாரடைப்பில் இருந்து தப்ப முடியுமா?
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இருதய கோளாறு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், அவர்கள் விட்டமின் டி குறைப்பாட்டை சரிசெய்துக் கொண்டால் ஒரளவு மேற்கண்ட பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த இருதய சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது.
விட்டமின்கள் குறைபாடு எந்த வகையில் இருதயத்தை பாதிக்கின்றன என்பது தொடர்பாக இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். நமது உடலுக்குத் தேவையான விட்டமின் பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்தும், எண்ணெய் மீன்கள், முட்டை போன்ற அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து பெறப்படுகிறது.
வயதானவர்கள், கருவுற்ற பெண்கள் சூரிய ஒளி படாத வகையில் ஆடைகளை உடுத்துவதால் அவர்களின் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த விட்டமின் டி குறைபாட்டின் விளைவு எலும்புகளை பலமிழக்கச் செய்வதோடு, எலும்பு இணைப்புகளில் உள்ள திசுக்கள் கடினமாவதுடன், புண்கள், சிதைவுகள், நகர்வுகள் ஏற்பட்டு பாதிப்புகளை உருவாக்கும்.
அமெரிக்காவில் கடந்த 1996 ஆம் ஆண்டு சராசரியாக 59 வயதான 1,700 பேரிடம் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. அவர்களின் விட்டமின் டி அளவு 7 ஆண்டுகளாக சோதனைசெய்யப்பட்டதோடு, அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இரத்தத்தில் ஓரு மில்லி லிட்டருக்கு 15 நானோகிராமிற்கும் குறைவாக விட்டமின் டி அளவு குறைந்து காணப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, இருதயம் செயலிழப்பு, ஸ்டோக் போன்ற நோய்கள், இரத்தத்தில் ஓரு மில்லி லிட்டருக்கு 15 நானோகிராமிற்க்கும் அதிகமாக விட்டமின் டி உள்ளவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருதயம், இரத்த நாளங்களில் குறைபாடுகள் ஆகிய நோய்கள் பெரும்பாலும் அதிக இரத்த அழுத்தம், விட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்குத் தான் அதிகம் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 28 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் ஓரு மில்லி லிட்டருக்கு 15 நானோகிராமுக்கும் குறைவான அளவு விட்டமின் டி உள்ளவர்களாக இருப்பதும், 10 விழுக்காட்டினரே 30 நானோ கிராம் விட்டமின் டி ஒரு மில்லி லிட்டர் இரத்தத்தில் கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு 30 நானோ கிராம் என்ற அளவுச் சிறந்ததாகும். விட்டமின் டி-யை ஈர்க்கும் திசுக்கள் இருதயத்தின் தசைப்பகுதியிலும், இரத்த நாளங்களின் மேற்பரப்புகளில் உள்ளன. எனவெ விட்டமின் டி குறைவு ஏற்பட்டால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன.
விட்டமின் டி குறைபாடு உண்மையிலேயே இருதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றனவா என்பது இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என இந்த ஆய்வுக் குழுத்தலைவர் மருத்துவர் தாமஸ் வேங் கூறியுள்ளார். இதனை உறுதி செய்ய விட்டமின் குறைப்பாட்டைச் சரிசெய்த பின்னர் பாதிப்புக்கான சாத்தியக் கூறு எந்த அளவு குறைந்துள்ளது என்பதைக் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இருதய ஆரோக்கியத்திற்கு பயன்படும் பிற விட்டமின்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பலன் தராமல் போனதற்கு காரணம், அந்த விட்டமின்கள் குறைபாடு நிவர்த்தி செய்யப்படும் நிலையில் இருதய பாதிப்புக்கான சாத்தியக் கூறுகளைக் கட்டுப்படுத்துமா என்பது குறித்து அந்த ஆய்வுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விட்டமின்களை கையாளுவது எளிதான ஓன்று தான், ஆனால் சில நேரங்களில் அவை குறைந்த அளவில் எதிர் விளைவுகளை உடலில் ஏற்படுத்தக் கூடியவை என்று இங்கிலாந்து இருதய அறக்கட்டளை மூத்த செவிலியர் ஜீன் டேவிசன் தெரிவித்துள்ளார். விட்டமின்களின் உடலில் செயல்படும் அமைப்பு முறைத் தொடர்பான நடைமுறை குறித்து மேலும் விவரங்களைத் தெரிந்துக் கொள்ள இன்னும் ஆய்வுகள் மேற்க் கொள்ள வேண்டியது இன்றியமையாதது என ஆய்வுக் குழுவின் தலைவர் மருத்துவர் தாமஸ் வேங் கூறியுள்ளார்.