களமிறங்கிய ’ஆண்ட்டி ப்ளூ ஸ்கை டீம்’: கலக்கத்தில் திமுக அண்ட் கோ?

DMK
Last Updated: திங்கள், 1 ஏப்ரல் 2019 (14:58 IST)
வேலூரில் வருமான வரித் துறை அதிரடியாக நடத்தி வரும் சோதனையால் திமுக தரப்பு கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. 
 
சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார்.
இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்தார். இன்று மீண்டும் வருமான வரி சோதனைகள் நடைபெறுகிறது. வேலூரில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் வார்ட் நம்பர் குறிப்பிட்டு மூட்டை மூட்டையாக  பணம் சிக்கியுள்ளது. 
இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில் ப்ளூ ஸ்கை ஆபரேஷன் என்ற பெயரில் திமுக தொகுதி ஒன்றிற்கு ரூ.100 கோடி வீதம், 20 தொகுதிகளுக்கு ரூ.2,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது என கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஆண்ட்டி ப்ளூ ஸ்கை என்ற ஆபரஷனை கைலெடுத்து வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது. இது திமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :