செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (21:21 IST)

தேர்தல் பரப்புரையை எப்போது தொடங்குகிறார் இபிஎஸ்..? முழு விவரம் இதோ..?

EPS Campaign
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வரும் 24ம் தேதி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் துவங்க உள்ளார்.
 
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வரும் 24ம் தேதி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் துவங்க உள்ளார். மார்ச் 24 ஆம் தேதி துவங்கும் முதற்கட்ட பிரச்சாரம் மார்ச் மாதம் 31ஆம் தேதி நாகப்பட்டினத்தில் முடிவடைகிறது.
 
எடப்பாடி பழனிச்சாமியின்  சுற்றுப்பயண விபரங்களை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 24 ஆம் தேதி திருச்சியிலும், 26 ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலியிலும், 27 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் தென்காசியிலும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


வருகிற 28ஆம் தேதி விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்திலும், 29ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும், 30ஆம் தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும், 31 ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.