திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (16:19 IST)

விரைவில் இணையும் ஒல்லி நடிகர் – இசையமைப்பாளர்?

கடந்த சில வருடங்களாக மனக்கசப்பில் இருக்கும் ஒல்லி நடிகரும், ஒல்லி இசையமைப்பாளரும் விரைவில் இணையலாம் என்கிறார்கள். 
ஒல்லி இசையமைப்பாளரைத் தன்னுடைய படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஒல்லி நடிகர். தான் நடித்த படங்கள் மட்டுமின்றி, தயாரித்த படங்களுக்கும் ஒல்லியையே இசையமைக்க வைத்தார் நடிகர். இருவரின் காம்பினேஷன் உலக அளவில் புகழ்பெற்றது.
 
ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. சில வருடங்களாக இருவரும் பேசிக் கொள்வதில்லை. இதில், ஒல்லி நடிகருக்குத்தான் அதிக நட்டம். ஒல்லி இசையமைப்பாளர் இல்லாமல் அவருடைய படங்களுக்குப் பெரிய வரவேற்பு இல்லை.
 
இருவரையும் இணைத்துவைக்கப் பலரும் பல முயற்சிகள் எடுத்தனர். ஆனால், எல்லாமே தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், அடுத்த வருடம் நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவோம் என ஒல்லி இசையமைப்பாளர் தெரிவித்ததாக கடந்த சில நாட்களாகத் தகவல் உலாவி வருகிறது.