ஆசை காட்டி மோசம் பண்ண ஒல்லி நடிகர்..


Cauveri Manickam (Suga)| Last Updated: சனி, 23 செப்டம்பர் 2017 (18:54 IST)
விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கிறேன் என்று உதார்விட்ட ஒல்லி நடிகர், அதன்பிறகு வாயே திறக்கவில்லை என்கிறார்கள்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை, ‘மாரியப்பன்’ என்ற பெயரில் படமாக இயக்கவிருப்பதாக அறிவித்தார் ஒல்லி நடிகரின் மனைவி. ஒல்லி நடிகரே, அவருடைய சொந்த பேனரில் தயாரிப்பதாக இருந்தது.
 
இந்தப் படத்தின் போஸ்டர் கூட வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை ஷூட்டிங் தொடங்கவில்லை என்கிறார்கள். உச்ச நட்சத்திரமான மாமனார் நடிக்கும் படத்தைத் தயாரித்துவரும் ஒல்லி நடிகர், அடுத்ததாக தெலுங்கில் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகிறார். எனவே, மாரியப்பனை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :