வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (14:47 IST)

இந்த ஆண்ட்ராய்டு வெர்சன்களின் வாட்ஸப் இயங்காது! – வாட்ஸப் நிறுவனம் அறிவிப்பு

உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்கு பெருமளவில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸப் இனி முந்தைய ஆண்ட்ராய்டு வெர்சன்களில் இயங்காது என அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் செயலிகளில் முக்கியமானதாக வாட்ஸப் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த செயலியை சுமார் 5 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றன. சமீப காலமாக தொடர்ந்து தனது செயலியை அப்டேட் செய்து வரும் வாட்ஸப் அதில் பணம் செலுத்தும் முறையையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-ன் பழைய வெர்சன்களில் இனி வாட்ஸப்பை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பை வாட்ஸப் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் ஐஓஎஸ் 9க்கு முந்தைய வெர்சன்களிலும், ஆண்ட்ராய்டு 4.0.3 க்கு முந்தைய இயங்கு தளங்களிலும் இனி வாட்ஸப்பை இன்ஸ்டால் செய்யவோ, உபயோகிக்கவோ முடியாது என கூறப்பட்டுள்ளது.