செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (18:13 IST)

உலகம் முழுவதும் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் முடக்கம்! – இணையவாசிகள் அவதி!

பிரபலமான ஆன்லைன் சாட்டிங் செயலிகளான பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பயனாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஆன்லைன் வழி தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகள். இந்த செயலிகள் மூலமாக பல மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இஸ்டாகிடாம் மற்றும் பேஸ்புக்கில் மெசஞ்சர் தொடர்பு முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

செயலிகளில் இது போன்ற கோளாறுகள் ஏற்படுவது சகஜம் என்றும் விரைவில் இது சரி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பேஸ்புக் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை