வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By VM
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (13:03 IST)

ஆதார் தொலைந்துவிட்டால் ரூ.50 கட்டணத்தில் புதிய அசல் ஆதார் அட்டை: விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்

ஆதார் அட்டை தொலைந்து விட்டால், . ரூ.50 கட்டணம் செலுத்தி இந்த புதிய அட்டையை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

 

 
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூகநல திட்டங்களுக்கான பண பலன்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இந் திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் யுஐடிஏஐ நிறுவனம், ஆதார் கார்டு தொலைந்து போனால், ரூ.50 கட்டணத்தில் அசல் ஆதார் அட்டையை வழங்கும் சேவையை சோதனை முயற்சியில் தொடங்கியுள்ளது.
 
புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (Pilot Basis) என்ற பகுதியை சொடுக்கி, புதிய அட்டைக்கு பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.50 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வீட்டுக்கே வந்து சேரும். இது மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறைகள் ஏதேனும் இருப்பின், பின்னாட்களில் சரி செய்யப்படுமாம்.
 
தமிழகத்தில் இதுவரை 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேருக்கு (93.6 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.