திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (20:37 IST)

ஐபிஎல்-2021; இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம்!

மும்பை அணி வீரர் இஷான் கிஷான் இன்றைய போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் 14 வது சீசனில்  இரண்டாவது பகுதி ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.

மும்பை அணி இன்றைய போட்டியில் மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் மும்பை அணி அதிரடியாக ரன் சேர்த்து வருகிறது. இதில், 4.2 ஓவர்களில் 67 ரன்கள் குவித்துள்ளனர். மேலும் தொடர்க்க வீரர் இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.