கே எல் ராகுலின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது – புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படும் கே எல் ராகுலின் பேட்டிங் தனக்கு மிகவும் பிடித்து விட்டதாக மேற்கிந்திய ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
கே எல் ராகுல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை 10 போட்டிகளில் அவர் 540 ரன்கள் சேர்த்துள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவரின் பேட்டிங்கை பற்றி வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா வானளாவப் புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘கே.எல். ராகுல் என் டெஸ்ட் அணி, டி20 அணி, 50 ஓவர் அணி ஆகிய மூன்று அணிகளிலும் இடம்பிடிப்பார். அவர் பேட் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு கேப்டனாக அவர் வீரர்களை சிறப்பாக ஒருங்கிணைக்கிறார். இப்போது போட்டியை வெற்றிகரமாக முடிக்கவும் அவர் கற்றுக்கொண்டுள்ளார்’ எனக் கூறியுள்ளார்.