விளாசித் தள்ளும் ரெய்னா : ஈடு கொடுக்கும் தோனி - சி எஸ் கே கலக்கல் ஆட்டம்

ipl
Last Updated: ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (19:16 IST)
இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 161 ரன்களை எடுத்துள்ளது. 
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சீராக விளையாடி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தனர். அதிகப்படியாக கிரிஸ் லின் 82 ரன்களை எடுத்தார்.
 
162 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தற்போது பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் பறிகொடுத்து 117 ரன்களுடன் விளையாடி வருகிறது. 
 
தோனி 14 ரன்களும், ரெய்னா 48 ரன்களுடன் தொடர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர். வெற்றி க்கு  162 ரன்கள் இலக்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :