கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே

Last Modified வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (07:28 IST)
ஐபிஎல் போட்டியின் 25வது போட்டியான சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி கொடுத்த 152 என்ற இலக்கை துரத்தி சென்ற சென்னை அணி ஒரு கட்டத்தில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. இதனால் சென்னை அணியின் வெற்றி கேள்விக்குறியாக இருந்த நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ராயுடு பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸ் அடித்தார். இதனால் 5 பந்துகளில் 12 ரன்கள் தேவையாக இருந்தது. 2வது பந்தில் இரண்டு நோபால் மற்றும் இரண்டு ரன்கள் கிடைக்க 4 பந்தில் 8 ரன்கள் தேவை. இந்த நிலையில் 3வது பந்தில் வீசப்பட்ட ஒரு அருமையான யார்க்கர் பந்தில் தோனி அவுட் ஆனார். எனவே 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 4வது மற்றும் 5வது பந்தில் தலா இரண்டு ரன்கள் எடுக்க ஒரே பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 6வது பந்தை ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு வைடாக வீசினார். எனவே ஒரே பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அதன்பின் கடைசி பந்தை எதிர்கொண்ட சாண்ட்னர் ஒரு சிக்ஸ் அடித்து அணியை த்ரில் வெற்றி பெற செய்தார்.

ஸ்கோர் விபரம்:

ராஜஸ்தான் அணி: 151/7
20 ஓவர்கள்

ஸ்டோக்ஸ்: 28 ரன்கள்
பட்லர்: 23 ரன்கள்
கோபால்: 19 ரன்கள்

சென்னை அணி: 155/6
20 ஓவர்கள்
தோனி: 58 ரன்கள்
ராயுடு: 57 ரன்கள்
சாண்ட்னர்: 10 ரன்கள்

ஆட்டநாயகன்: தோனி

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது

இன்றைய போட்டி கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :