வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (05:48 IST)

ஐபிஎல் 2019: பஞ்சாபிடம் வீழ்ந்தது டெல்லி:

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கர்ரான் அபாரமாக பந்துவீசி 2.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
 
இந்த போட்டியில் அஸ்வின் மற்றும் ஷமி தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அனி 6 புள்ளிகளுடன் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 
 
ஸ்கோர் விபரம்
 
பஞ்சாப் அணி: 166/9  20 ஓவர்கள்
 
மில்லர்: 43 ரன்கள்
கான்: 39 ரன்கள்
மந்தீப்சிங்: 29 ரன்கள்
கர்ரான்: 20 ரன்கள்
 
டெல்லி அணி: 152/10  19.2 ஓவர்கள்
 
ரிஷப் பண்ட்: 39 ரன்கள்
இங்க்ராம்: 38 ரன்கள்
தவான்: 30 ரன்கள்
ஸ்ரேயாஸ் ஐயர்: 28 ரன்கள்
 
இன்றைய போட்டி: ராஜஸ்தான் மற்றும் பெங்களூர்