வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (21:58 IST)

டெல்லிக்கு 167 இலக்கு கொடுத்த பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் சண்டிகர் மைதானத்தில் மோதி வருகின்றன.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.
 
பஞ்சாப் அணியின் மில்லர் 43 ரன்களும், கான் 39 ரன்களும், மந்தீப் சிங் 29 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ரன்ரேட் அதிகமாக உயரவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
 
டெல்லி அணியின் மோரிஸ் 3 விக்கெட்டுக்களையும், ரபடா, லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இரண்டு விக்கெட்டுக்கள் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 167 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கவுள்ளது. பிபி ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்க்ராம் என நீண்ட பேட்டிங் வரிசை இருந்தாலும், அஸ்வின், ஷமி, ரஹ்மான், விஜோயன் ஆகியோர்களின் பந்துவீச்சை டெல்லி சமாளித்து வெற்றிக்கனியை பறிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்