டிக்டாக் தோழியுடன் எஸ்கேப் ஆன கணவர்: மனைவி போலீஸில் புகார்!

Prasanth Karthick| Last Modified புதன், 22 ஜனவரி 2020 (11:47 IST)
டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு வந்த கணவர் வேறு பெண்ணுடன் ஓடிவிட்டதாக மனைவி புகார் அளித்துள்ளது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் சுகன்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதிலேயே ஆர்வமாக இருந்து வந்துள்ளார் ராஜசேகர். மேலும் குடித்து விட்டு வந்து சுகன்யாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சுகன்யா போலீஸில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்த விசாரணையில் ராஜசேகர் தனது டிக்டாக் தோழி அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து டிக்டாக் செய்து வருவதாக போலீஸார் சுகன்யாவிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகன்யா தன் கணவர் மீது புகார் அளித்துள்ளதுடன், டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :