1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (10:00 IST)

மாதம் தவறாமல் ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் உண்டாகும் பலன்கள் !!

மோட்சத்தை அளிக்கும் விரதங்களுள் ஒன்று தான் ஏகாதசி. ஏகாதசி விரதம் என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு அற்புதமான தினமாக இருக்கிறது.

 
ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பல. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.
 
பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பக்தர்கள், மாத ஏகாதசியில், மாதம் தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை வணங்குபவர்கள் இருக்கிறார்கள்.
 
ஏகாதசி நாளில் விரதம் இருந்து ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
 
அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். புத்தியில் தெளிவும், காரியத்தில் வெற்றியும் உண்டாகும்.