1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (12:20 IST)

காலபைரவரை வழிபட கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வேண்டினால் தடைகள் தகர்க்கப்பட்டு வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.


பைரவருக்கு மிளகு கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது. பைரவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொண்டால் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.

காலபைரவரை வழிபட்டால் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி விடும், எவ்வளவு பெரிய கடன் களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும். சனியின் தாக்கம் தீரும்.

வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை நிவர்த்தி ஆகும்.

நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.