1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளர செய்யும் அற்புத குறிப்புகள்...!!

முடி உதிர்தல் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. அதுவே அவர்களுக்கு நாளடைவில் மனஅழுத்தத்தை உண்டாக்கும். சில இயற்கை வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி முடி உதிர்தல் பிரச்சனையை போக்கலாம்.
வெங்காயச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் தலைக்குக் குளித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். 
 
ஆமணக்கு எண்ணெய், வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக்  குளித்தால், தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும்.
 
முட்டையில் வெள்ளையுடன் சிறிதளவு வெங்காயச் சாறு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின் தலையில் தேய்த்து 15 - 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்தால் வந்தால் முடி பட்டு போல் மினுமினுப்பாகும்.
 
இரண்டு ஸ்பூன் வெங்காயச் சாறு மற்றும் அரை ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 30 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.
 
எலுமிச்சை மற்றும் வெங்காயச் சாறு இரண்டையும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்கு கலக்குங்கள், 30 நிமிடங்கள் தேய்த்து நன்கு மசாஜ் செய்தால், வேர்கள் வளர்ச்சிக்குத் தூண்டப்பட்டு முடி நன்றாக வளரும்.
 
ஆலிவ் எண்ணெய், வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். தலையின் வேர்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து  2 மணி நேரம் கழித்துக் குளித்தால் ஆரோக்கியமான கூந்தல் வளரும்.