வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலாப்பழத்தினை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்...!!

பலாப்பழத்தின் நன்மைகள் பலாவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மர்றும் பாக்டீரியாவை எதிர்த்து  உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை.
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
 
பலாப்பழத்தில் வைட்டமின் சி-யுடன் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான மிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன.
 
பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. ஆகவே இந்த பழத்தை உட்கொண்டு வந்தால்,  மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
 
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழம் தான். மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. 
 
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின்  தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
 
பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு  சக்தி அதிகரிக்கும்.