1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (18:58 IST)

புற்றுநோய் வருவது ஏன்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Cancer
புற்றுநோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் கூறப்பட்டாலும் பெரும்பாலான புற்று நோய்கள் உடல் பருமன் காரணமாகத்தான் வருகிறது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் கூறப்பட்டுள்ளது. 
 
10 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகில் புற்றுநோயால் உடல் பருமன் காரணமாகத்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. மேலும் புகைப்பழக்கம், மது அருந்துதல் ஆகியவை காரணமாகவும் புற்றுநோய் வரும் என்றும் சிறுவயதில் குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுத்தாலும் புற்றுநோய் வரும் என்றும் கூறப்படுகிறது. 
 
உடல் பருமன் உடைய எல்லோரையும்புற்றுநோயை தாக்காது என்றாலும் உடல் பருமனை அதிகரித்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே உடல் பருமனை குறைத்தால் புற்றுநோயை தவிர்க்கலாம் என்பதை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டு சரியான உடற்பயிற்சி செய்து உடல் பருமன் அடையாமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran