வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (09:06 IST)

இப்படி செய்தால்தான் யோகா பலன் அளிக்கும்! – என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா பயிற்சி அவசியமானதாக உள்ளது. யோகா பயிற்சியை சரியான விதத்தில் செய்தால் மட்டுமே பலனளிக்கும். யோகா பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.


  • உடலையும் மனதையும் ஒன்றிணைத்து செய்யப்படும் அற்புதமான கலைதான் யோகா.
  • பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் பலவகை யோக ஆசனங்கள் உள்ளன.
  • அவரவர் வயது மற்றும் தேவைக்கு ஏற்ப சரியான யோக ஆசனங்களை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
  • யோக ஆசனங்களை விடியற் காலையில் ஆகாரம் ஏதும் கொள்ளாமல் வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும்.
  • யோகா செய்யும் இடம் திறந்தவெளியில் காற்றோட்டம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.
  • மன அமைதியை ஏற்படுத்தும் விதமான அமைதியான இடமாக இருக்க வேண்டியது அவசியம்.
  • யோக ஆசனங்களை வெறும் தரையில் அமர்ந்து செய்யக் கூடாது. தரை விரிப்புகள் அமைத்து அதன் மீது பயிற்சி செய்ய வேண்டும்.