1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (15:21 IST)

பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டால் என்னவாகும்...?

பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

 
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த  டானிக். 
 
பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
 
மலச்சிக்கலினால் துன்பப்படுகிறவர்கள் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர் இரவு படுக்கைக்கு முன் அருந்தவேண்டும். 
 
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
 
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால்  பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
 
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
 
பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.